கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4705 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலயத்தில் 60 பேர் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.
இவற்றில் அதிக தொற்றாளர்கள் தெஹியோவிட்ட சுகாதார அதிகார பிரிவில் இனம்காணப்பட்டுள்ளனர். இப்பிரிவில் இதுவரை 849 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலயத்தில் மாத்திரம் மாவட்டத்தில் 60 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் கேகாலை சுகாதார அதிகாரி பிரிவில் 680 பேரும், ரம்புக்கன சுகாதார அதிகாரி பிரிவில் 359 பேரும், மாவனல்லை சுகாதார அதிகாரி பிரிவில் 361பேரும், அரநாயக்க சுகாதார அதிகாரி பிரிவில் 282பேரும், கலிகமுவ சுகாதார அதிகாரி பிரிவில் 341பேரும், வரக்காபொல சுகாதார அதிகாரி பிரிவில் 536பேரும், புளத்கோபிட்டிய சுகாதார அதிகாரி பிரிவில் 285பேரும், ருவன்வெல்ல சுகாதார அதிகாரி பிரிவில் 366பேரும், எட்டியாந்தோட்டை சுகாதார அதிகாரி பிரிவில் 319பேரும், தெஹியோவிட்ட சுகாதார அதிகாரி பிரிவில் 849 பேரும்,
தெரணியகலை சுகாதார அதிகாரி பிரிவில் 327 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை மாவட்டத்தில் 34 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. தற்பொழுது 5287 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.