பாடகியாக இருந்த நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் போன்ற ஏராளமான சினிமா படங்களில் நடித்து இருக்கின்றார்.
திறமையும் அழகும் ஒருங்கே சேர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் திறமையான நடிகையாக ஆண்ட்ரியா கருதப்பட்டார்.
இதற்கு நடுவே அவ்வப்போது மேடை கச்சேரி, ஆல்பம் பாடல்கள் என்று அசத்தி வந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி எடுத்து வருகின்றார்.
ஆண்ட்ரியா தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. அத்துடன் அவருடைய குணம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்தனக்கென்று ஒரு பாணியை எப்பொழுதும் அவர் கையாள்வது வழக்கம்.
அவரது தனித்தன்மையே அவரது சிறப்பு என்று ரசிகர்கள் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
View this post on Instagram
V