கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இதை தூக்கி எறியுங்க..

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்த நிலையில், அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து அறிவுரை கூறி வருகின்றனர்.

மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவு வீரியமடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கொரோனா வைரசுக்கு ஆளாகாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வந்தவர்கள் தங்களின் பல்துலக்கி (Tooth Brush) மற்றும் நாக்கு சுத்தம் செய்யும் (Tongue Cleaner) சாதனத்தை தூக்கி எறிந்து புதிதாக பயன்படுத்த வேண்டும் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், இவைகளை மாற்றுவதன் மூலமாக, அதில் ஏற்கனவே ஒட்டியிருக்கும் கிருமிகள் மேலும் பரவாமல் தடுக்க முடியும். இதனால் இரண்டாவது முறை கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.