இந்தியாவில் பசு மாட்டை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக்கேட்ட இளம்பெண் தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் வசிக்கும் விஷால் தாக்கோர் என்ற வாலிபர், தான் வளர்த்து வந்த பசு மாட்டை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அப்பொழுது 17 வயது இளம்பெண் ஒருவர் கோவிலுக்குச் சென்று வந்துள்ள தருணத்தில், மாடு வலியால் கத்தியதைக் கேட்டு, வாலிபரை மாட்டை கொடுமைப்படுத்தாமல் தடுத்துள்ளார்.
உடனே கோபப்பட்ட தக்கோர், மாட்டை அடிப்பதை விட்டுவிட்டு, குறித்த பெண்ணை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் அப்பெண் காயமடைந்து கீழே விழுந்த நிலையில், ரத்தவெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பின்பு தக்கோர் மீது அந்த பெண்னின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததையடுத்து, தாக்கூரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.