இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் சொயிஸா பெண்கள் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக புதிய குழந்தைகள் பிறப்பு தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் நலின் கமஎதிகே தெரிவித்துள்ளார்.
குறித்த அனைத்து குழந்தைகளையும் உரிய பாதுகாப்புக்கு மத்தியில் கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் காலத்தில் கொவிட் வைரஸ் தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.