இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் – சாணக்கியன்

இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா ஒழிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை யாரும் கொள்ளையடிக்கின்றனரா? என்ற சந்தேகம் கூட எங்களுக்கு காணப்படுகின்றது.

இது மாபியாவாக வருமானம் உழைப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு விடயமா? என்ற சந்தேகம் கூட இருக்கின்றது.

இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் – அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு 45 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கொரோனா நிலையம் ஒன்றினை வழங்கியுள்ளனர். ஆனால் அது இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

இட்டுகம கொரோனா நிதியத்திற்கு இலங்கையிலுள்ள அதிகளவான நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என நிதியினை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரின் அறிக்கையின்படி ஜனவரி 31ஆம் திகதியளவில் கொரோனா நிதியத்தில் ஆயிரத்து 720 மில்லியன் ரூபாய் பணத்தில் ஆறு வீதமான பணம்தான் செலவிடப்பட்டுள்ளது.

ஆகவே எஞச்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே?“ எனக் கேள்வி எழுப்பினார்.