வைத்தியர் ஷாபி சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஏன் கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? என தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அரச ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.