கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 4.01 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் நேற்றைய தினத்தில் 4,187 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்து இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகா,டெல்லி மற்றும் தமிழகத்தில் இரவு ஊரடங்கும், முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் திரைப்பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், பிரபல நடிகர் அக்ஷய் குமார், நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சோனூ சூட் ஆகியோருக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தகைய நிலையில் தற்போது நேற்றைய தினத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்.