கோலிவுட்டில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா நம்பீசன். இதைத்தொடர்ந்து, அவர் பீட்சா திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினார். அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது.
சமீபத்தில் பிக்பாஸ் ரியோ ராஜுக்கு ஜோடியாக பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். விரைவில் இது திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்பொழுதும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா நம்பீசன் இவர் தனது ட்விட்டர் பக்கங்களில் மிகவும் அழகான க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் இலைகளை அள்ளி வருவார்.
அந்த வகையில், இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர். முன்னதாக சினிமாத்துறையில் அவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.