இடுப்பு தெரியும் போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி.!

நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகள் இடையே தீயாக பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த சீரியலில் இவரது நடிப்பிற்கு பல இளைஞர்கள் அடிமையாக இருந்தனர். சின்னத்திரையில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்ப்பை பயன்படுத்தி பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

மேயாதமான் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்து இருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வந்தார். தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.