கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்த தவறினால் தற்போது உள்ள நிலைமையின் கீழ் எதிர்வரும் செப்ரெம்பர் 1ம் திகதி ஆகும் போது நாட்டில் சுமார் 30,000 கொரோனா மரணங்களை எதிர்பார்க்கலாம் என சுகாதார தரவு அமைப்பு Health Data Organization கணித்துள்ளதாக சுகாதார நிர்வாகம் தொடர்பான கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

எனினும் கொரோனா பரவல் நிலையை கட்டுப்படுத்தினால் மரணங்களை 20,000 தொடக்கம் 15,000 வரை குறைத்துக் கொள்ள முடியும் என Health Data Organization அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

B.1.617 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் உயிராபத்து மிக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் தற்போது குறித்த B.1.617 கொரோனா வைரஸ் தாக்கமே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.