இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில், தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனால், அவர்களின் உயிரைக் காக்கும் வகையில், முதலில் கொரோனா எளிதில் பரவுவோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா நோயாளிகளை தினசரி சந்திக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவ மக்கள் தொடர்பு அலுவலர் கூறியுள்ளார்.
மேலும், மருத்துவ தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் விஜயேஷ் பரத்வாஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.