ஆப்கானிஸ்தானின் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தெற்கு ஜாபுல் மாகாணத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது. ஆப்கன் தலைநகரான காபூலில் பாடசாலையருகே நேற்று முன் தினம் குண்டு வெடித்ததில் 58க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியானார்கள்.
150க்கு மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவிகள்.
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆப்கனிலிருந்து அமெரிக்காவின் ராணுவம் முழுமையாக விலக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது என அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.