அமெரிக்காவில் தனது 65 வயதான தாயைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்கர் சர்மா (28) சனிக்கிழமை காலை Bellerose Manor-ல் உள்ள Jamaica-வில் உள்ள வீட்டில், தனது தாய் சொராஜ் சர்மா மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
புஷ்கர் தனது தாயை பின்னால் இருந்து பிடித்து, தரையில் விழும் வரை மூச்சுத் திணற வைத்துள்ளார். பின்னர் சொராஜ் கீழே விழுந்ததும் பலமுறை குத்தியதாகவும், பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து இரத்தக் கறைகளுடன், தனது பணப்பை மற்றும் கார் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெகு தூரத்துக்கு நடந்து சென்று 105-த்து தெருவில் அமர்ந்துகொண்டர். அங்கு வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று காலை, தூக்கத்திலிருந்து எழும் போதே கட்டுப்படுத்தமுடியாத கொலைவெறியுடன் இருந்ததாக புஷ்கர் பொலிஸில் விசாரணையில் கூறியுள்ளார்.
அதே கட்டிடத்தில் மேல் வீட்டில் இருந்த சொராஜ் ஷர்மாவின் மகள் வந்து பார்த்தபோது அவர் இரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரச அழைப்புக்கு தொடர்பு கொண்டதையடுத்து, அவர் Long Island Jewish மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் முன்பே இறந்துவிட்டதாக உறுதிசெய்தனர்.
புஷ்கர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜாமீன் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு வரும் மே 24-ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.
சர்மாவின் பக்கத்து வீட்டுக்காரரான கெல்வின், புஷ்கர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் இந்த அளவுக்கு நினைத்துப்பார்க்க முடியாத காரியத்தை செய்வார் என நம்பமுடியவில்லை என கூறினார்.
ஏற்கெனவே ஒரு முறை, புஷ்கர் தவறாக நடந்துகொண்டதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.