தமிழை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஷகிலா மலையாள சினிமாவில் கவர்ச்சியில் உச்ச நடிகையாக வலம் வந்தவர். இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால், இவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இறுதியில் கவர்ச்சி நடிகையாகவே மாற்றிவிட்டனர்.
இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது, ஷகிலா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற பிறகு ஷகிலாவின் மீதான ரசிகர்களின் பார்வை முற்றிலும் மாறியுள்ளது. ரசிகர்கள் அவரை எங்கு பார்த்தாலும் அவரை அம்மா என்று அழைக்க தொடங்கியுள்ளதாக சமீபத்திய நேர்காணலில் ஷகிலா கூறியுள்ளார்.
நடிகை ஷகிலா தனது வாழ்வை தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் ஒரு திருநங்கை பெண்ணை மகளாக வளர்த்து வருகிறார் என்பது சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram