இந்தியாவின் கங்கை கரையில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருவதால், நாடு முழுவதும் மயானங்களில் சடலங்களை எரியூட்ட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் மயானத்தின் வாசலில் மணிக்கணக்கில் சடலங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய, பீகாரின் பக்சர் மாவட்டத்திலும், உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்திலும் கங்கை நதிக் கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் புக்சர் மற்றும் ரவுதாபூர் ஆகிய கிராமங்களில் கங்கை கரையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.