ஒரேநாளில் உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு…

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இறுதியாக 31 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 923 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று காரணமாக ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர்.

27 ஆயிரத்து 54 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.