கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. சீனாவில் தொடங்கி பல உலக நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்றது.
இந்த வைரஸை எதிர் கொள்ளவேண்டுமாயின் சத்தான் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிலும் நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரஸை எதிர்கொள்ள உதவும் என அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
அதில் குறிப்பாக தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம்.
அந்தவகையில் வைரஸை எதிர்கொள்ள சேர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
புரதங்கள்
மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது.
பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்றவை நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அவருடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு கிராம் என்ற அளவு ஏற்றபடி உண்ண வேண்டும்.
வைட்டமின் ஏ
கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
இது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. நமது உணவில் 200 கிராம் அளவு இந்த பழங்களை எடுத்துக்கொண்டாலே வைட்டமின் ஏ சத்து எளிதாக கிடைக்கும்.
வைட்டமின் சி
எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன. குறைந்தது எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி
மீன் எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே இது உள்ளன. இத்தகைய உணவுகள் 10-ல் இருந்து 15 மி.லி. சேர்த்தால் போதுமானதாகும்.
துத்தநாக சத்து
பழுப்பு அரிசி, எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பூசணிக்காய், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் உள்ளன. இந்த தாது உப்பு எதிர்ப்பு சக்தியை வலுவாக்க ஒரு நல்ல சத்தாகும்.
இது ஒரு நபருக்கு 2 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது. நல்ல சத்தான உணவுகளில் இது உள்ளன. தயிர் போன்றவற்றிலும் இந்த துத்தநாகம் உள்ளது.
கொழுப்பு சத்து
கருப்பு சுண்டல், தோல் உளுந்து, ஆளி விதை போன்ற உணவுகளில் கொழுப்பு சத்து உள்ளன.
இந்த ஆளி விதைகளை தினந்தோறும் 10 கிராம் அளவு வறுத்து பொடி செய்து நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே இந்த கொழுப்பு சத்து எளிதாக கிடைத்து விடும்.
காரத்தன்மை
உணவுகளில் காரத்தன்மை அதிகமாக இருந்தால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லமை படைத்தது. இதன் அடிப்படையிலேயே கசாயங்கள் போன்றவை எடுத்து கொள்ளலாம்.
இந்த காரத்தன்மை உணவுகளில் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், மூலிகைகளான துளசி, ஓமவள்ளி, புதினா, வெற்றிலை, பூண்டு, பால் போன்ற உணவுகளில் உள்ளன. மேலும் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அதனை சூடாக உண்ண வேண்டும்.