கடந்த மூன்று நாட்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், பளையில் 5 பேருக்கும், கரைச்சியில் 22 பேருக்கும், கண்டாவளையில் 11 பேருக்கும், பூநகரியில் 3 பேருக்கும், கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்த 7 பேருக்கும் என 48 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கல்மடு 7 ஆம் யுனிற் பகுதியில் ஒரு நாளில் பலருக்கு தொற்று இனம் காணப்பட்டமையால் குறித்த பகுதி மாத்திரம் முடக்கப்படுகிறதாக மாவட்ட அரச அதிபர் அறிவித்துள்ளார்.
எனவே தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் அதிக விழிப்புடன் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்கி பொறுப்புடன் செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.