மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெசாக் பண்டிகை முடியும் வரை பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொதுமக்களின் ஆதரவு கோவிட் பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள உதவியாக அமையும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து ஒத்துழைத்ததைப் போன்று, அடுத்த 10 நாட்களும் பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.