பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – கல்வியமைச்சர்….

அனைத்து பாடசாலைஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் முலும் தெரிவிக்கையில்,

சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும். மேல் மாகாணத்தில் (WP) உள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேபோன்று ஏனைய மாகாணங்களிலும் இதேபோன்ற நடைமுறையை விரைவில் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.