இலங்கை இராணுவத்தின் 452 அதிகாரிகளுக்கு ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைவாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் 4, 289 இராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த தரங்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பெறுவதற்காக யுத்த வெற்றி தினமான இன்றைய தினத்தின் நினைவினை முன்னிட்டே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.