யாழ்.பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

குறித்த மீன் சந்தையிலுள்ள வியாபாரிகள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.