ஆவி பிடிப்பதால் கொரோனா அழியுமா?

ஆவி பிடிப்பதால் கொரோனா கிருமி அழிந்து விடும் என்பதெல்லாம் உண்மை அல்ல என தொற்று நோய் மருத்துவர் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்த மருத்துவர் திலீப் குமார், ஆவி பிடிப்பது தமிழ் நாட்டில் புதிதல்ல.

பன்றி காய்ச்சல் மாதிரியான காய்ச்சல்களுக்கு ஆவி பிடிக்குமாறு கூறியுள்ளோம். ஆவி பிடிப்பதற்கான பலன் என்பது இருமல் அதிகம் இருப்பது, தொண்டை கரகரப்பு, இவை குறைவதற்காக ஆவி பிடிக்குமாறு அறிவுறுத்துவோம்.

ஆனால் ஆவி பிடிப்பதால் கொரோனாவே போய் விடும், கொரோனா கிருமியே அழிந்து விடும் என்பது நாம் கை தட்டினால் கொரோனா குறையும் என்பது போன்றே. மருத்துவர் அறிவுரை படி வேண்டுமானால் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

கேள்வி : என்னென்ன பொருட்களை ஆவி பிடிக்கும் போது சேர்த்து கொண்டு பயன்படுத்தலாம்?

மருத்துவர் விளக்கம்

உண்மையாக கூறவேண்டுமானால் எந்த பொருளையும் சேர்க்காமல் ஆவி பிடித்தல் நல்லது. அவ்விதம் செய்வதால் தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் மட்டுமே குறையும் ஆனால் கொரோனா குணமடையாது. கொஞ்சம் பெட்டராக உணருவோம். அவ்வளவு தான்.

அதற்காகத் தான் ஆவி பிடிக்க சொல்கிறார்கள். இதனை தவிர்த்து சிலர் ஆவி பிடிக்க விக்ஸ் பயன்படுத்துவர். சிலர் யூக்லிப்டப்ஸ் ஆயில் பயன்படுத்துவர்.

நிறைய மருந்து கலந்து ஆவி பிடிப்பதால் எந்த ஒரு நலனும் கிடைக்கபோவது இல்லை.

கேள்வி : ஆவி பிடிக்கும் போது ஒரு பகுதியில் இருக்கும் கிருமி மற்ற பகுதிகளுக்கும் பரவ கூடிய சூழல் உள்ளது யாரும் ஆவி பிடிக்க வேண்டாம் எனவும் கூறுகின்றனர். அது உண்மையா? கிருமி பரவுமா?

மருத்துவர் விளக்கம்

வீட்டிற்குள் தனிமை படுத்திகொண்டு ஆவி பிடிப்பதனால் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. நாங்களே வீட்டில் தனிமை படுத்திக் கொள்வோருக்கு வீட்டில் இருந்து ஒன்று அல்லது இரண்டு முறை ஆவி பிடிக்க அறிவுறுத்துகின்றோம். ஆனால் 4 பேர், 5 பேர் என சேர்ந்து பொதுவாக சேர்ந்து செய்யும் போது இருமும் போது கண்டிப்பாக பரவ வாய்ப்புள்ளது. ஆவியால் பரவாது. ஆவி பிடிப்போர் கூட்டமாக சேர்ந்து ஆவி பிடிக்கும் போது அவர் இருமினால் அவர் மூலம் பிறருக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

சூடாக சாப்பிடுமாறு கூறுகிறார்கள் அது உண்மையா?

மருத்துவர் விளக்கம்

அதில் பெரிதும் மருத்துவ குணம் ஒன்றும் இல்லை. பிடித்திருந்தால் சாப்பிடலாம். அதனால் எந்த பயனும் இல்லை.