மலையான சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரேமம் படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். இவர் சிறந்த பாடகராகவும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து மடோனா தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதையடுத்து அவர் ‘கவண்’, தனுசுடன் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில்அவர் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் “சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும்.
அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது எனது அதிர்ஷ்டம்” எனவும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் மடோனாவின் காதலன் என கூறினர்.
இந்த நிலையில், தற்போது நடிகை மடோன்னா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram