இலங்கையில் மகரகம, பமுனுவ பகுதியில் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். தமாரா தனுஷிகா ஜெயவீர (31) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே கொல்லப்பட்டுள்ளார்.
16ஆம் திகதி மாலையில் இரண்டு பிள்ளைகளும் உறக்கத்தில் இருந்த போது, கணவன் மனைவிக்கிடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. இது முற்றி, இரும்புக் கம்பியினால் கணவன் நடத்திய தாக்குதலில் மனைவி உயிரிழந்தார்.
பிரதேசத்தில் பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளரான கணவர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.