கிளிநொச்சியில் 48 பேருக்கு கொரோனா……

கிளிநொச்சியை சேர்ந்த 48 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் பெருமளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய, கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 41 பேரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கிளிநொச்சியிலுள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மேலும் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.