இது சிங்கள பிரதேச செயலகம் நீங்கள் கடமையாற்ற முடியாது; முஸ்லீம் பெண்ணை திருப்பி அனுப்பிய பிரதேச செயலர்…. வெளியான தகவல்

அம்பாறை பிரதேச செயலகத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்க சென்ற முஸ்லிம் பெண்மணியை கடமையேற்க விடாது பிரதேச செயலாளர் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

“இந்த பிரதேச செயலகம் முழுக்க முழுக்க சிங்களவர்கள் கடமையாற்றும் – சிங்கள பிரதேச செயலகம் என்றும் இங்கு முஸ்லிமாகிய நீங்கள் கடமையாற்ற இடமளிக்க முடியாது என கூறிய பிரதேச செயலாளர் , வேறிடம் சென்று கடமைமை புரியுங்கள் என சிங்கள மொழியில் கடிதமொன்றையும் வழங்கி திருப்பி முஸ்லிம் பெண்மணியை அனுப்பியுள்ளார். இதன் காரணமாக பட்டதாரியான முஸ்லிம் பெண், தனது நியமனம் மற்றும் கடமை புரிதல் தொடர்பில் பெரும் அச்சமடைந்துள்ளார்.

எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்ற தயாராக இருக்க வேண்டும் என அரச ஊழியர்களிடம் உறுதியுரை பெற்றுக் கொண்டநிலையில், இவ்வாறு இன ரீதியாக , அரச அதிகாரியான பிரதேச செயலாளரே அதனை மீறுகின்றார் என்றால் , ஜனாதிபதியின் ” ஒரே நாடு , ஒரே சட்டம்” என்ற எங்கே என்ற கேள்வி எழுகிறதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வின் கொள்கை பிரகடனத்தை மீறியிருக்கும் இந்த பிரதேச செயலாளர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது யார்? பாதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது யார் ? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.