நாட்டிலுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பூட்டு….. விவசாய அமைச்சு..!!

எதிர்வரும் வாரத்தில் இரண்டு பகுதிகளாக பயணத்தடை விதிக்கப்படவுள்ள நிலையில் இந்தக்காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படவுள்ளன. விவசாய அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு  மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன. இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.