கன்னடத்தில் வெளியான ‘கிரிக்பார்ட்டி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதனிடையே நடிகை ராஷ்மிகா ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அதற்கான பணிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டன.
இந்த நிலையில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ரீமேக் படம் என்பதால் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்திலும், இந்தியில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக ‘மிஷன் மஜ்னு’ படத்திலும், அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.