நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் சிக்கி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ரகுல்பிரீத் சிங்குக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று மீண்டார்.
ரகுல்பிரீத் சிங் கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா தொற்றில் சிக்கினால் வலிமையாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள். ஜீரணிக்க கடினமான உணவுகளை சாப்பிட வேண்டாம். பால், வறுத்த மற்றும் உறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சூடான தேநீர், சூப் வகைகளை பருகுங்கள். கசப்பான காய்கறிகளை சாப்பிடுங்கள். எளிமையான உணவுகளையே எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.