தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கஞ்சா விற்ற குற்றத்திற்காக இலங்கை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பொலிஸார் நேற்று முகாமில் உள்ள மைதானம் அருகே அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்கிற பத்மநாதன் (25) என்பவரை மடக்கி பிடித்தனர்.
லொறி ஓட்டுனரான இவர், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து முகாமில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பத்மநாதனை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.