47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து எழுந்த விவாதத்தில், ஈரானிய இயக்குநரைப் பெற்றோரே ஆணவ கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரான் நாட்டை சேர்ந்த சினிமா இயக்குநர் பாபக் கோரம்டின். 47 வயதான இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இவரது குறும்படங்கள் பல, சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாபக் கோரம்டின் உடல் ஈரான் நாட்டின் எக்படன் என்ற பகுதியிலிருந்த குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
அங்கு சூட்கேஸ் ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கோரம்டினை ஆணவக் கொலை செய்ததை அவரது தந்தை ஒப்புக் கொண்டார். மேலும், கொலை செய்த பிறகு, உடலைத் துண்டு துண்டாக வெட்டி அதை மறைக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட கோரம்டினுக்கு 47 வயதாகிறது. அவர் திருமணம் ஆகாமல் சிங்களாகவே இருந்துள்ளார். திருமணம் குறித்து பெற்றோருக்கும் அவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையாக முற்றியுள்ளது. இதையடுத்து தாய்-தந்தை இருவரும் சேர்ந்து கோரம்டின் சாப்பிடும் உணவில் மயக்க மருந்தைக் கலந்துள்ளனர்.
அதன் பிறகு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர், கோரம்டினின் உடலை மறைக்க, பெற்ற மகன் என்றுகூட பாராமல், உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் அதை சூட்கேஸ்களில் போட்டு, குப்பையில் வீசியுள்ளனர். தங்கள் செய்த குற்றத்தை அவர்களது பெற்றோர் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காகத் தாய்-தந்தை இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தனிமையில் இருந்தான், அவர் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். அவரது செயல்பாடுகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சமாக இருந்தது. இதனால் நாங்கள் ஒரு நாளும் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. யார் கூறுவதையும் கேட்காமல் விருப்பப்பட்டதைச் செய்து வந்தான். இதன் காரணமாகவே அவரை கொலை செய்ய நானும் எனது மனைவியும் முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் துளியும் வருந்தவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.