தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றால் கொரோனா நோயாளி மூச்சு திணறி துடி துடித்த உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கொரோனா நோயாளி திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கதறிய படி ராஜாவின் மனைவி கூறியதாவது, வெண்டிலேட்டர் மூலம் கணவர் ராஜா சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவர் ஒருவர் திடீரென வந்து வேறோரு நோயாளிக்கு வெண்டிலேட்டர் தேவைப்படுவதாக கூறி கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை எடுத்துச் செல்ல முயன்றார்.
அவர் கணவரின் ஆக்ஸிஜன் சரியாக இருக்கிறதா என எந்தவித சோதனையும் மேற்கொள்ளாமல் வெண்டிலேட்டரை பிடுங்க முயன்றார்.
வேண்டாம் என மருத்துவரிடம் நான் போராடினேன். என்னை தள்ளிவிட்டு மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் எடுத்துச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, எனது கணவர் மூச்சு திணறி துடி துடித்து இறந்துவிட்டார். என் வாழ்க்கையே போச்சு என ராஜாவின் சடலத்திற்கு அருகே இருந்தபடி மனைவி கதறும் காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜனை எடுத்துச் சென்ற கொடூரம்
#SaveTN pic.twitter.com/iJAV9zpG5l
— 𝙼𝚞𝚛𝚞𝚐𝚊𝚗 𝙻𝚘𝚐𝚊𝚗𝚊𝚝𝚑𝚊𝚗 (@MuruganLoganat1) May 21, 2021
மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்ததுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்வதிடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.