மே 31 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. மே மாதம் 31ஆம் திகதி முதல், வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் Jean Castex நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இத்திட்டத்தை செயல்படுத்த பிரான்ஸ் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தடுப்பூசி வழங்கி, தடுப்பூசி திட்டத்தை வேற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக பிரான்ஸ் அரசு சமீபத்தில் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான கட்டுப்பாடுகளையும் வயது வரம்பையும் நெகிழ்த்தியது. புதன்கிழமை நிலவரப்படி, பிரான்ஸ் 21மில்லியன் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளது.
இது பிரான்சின் மொத்த மக்கள் தொகையில் 32 சதவிகிதமும், மொத்த வயதுவந்தோரில் 41 சதவிகிதமும் ஆகும். அத்துடன், 9 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியையும் பெற்றுவிட்டார்கள்.