இலங்கையில் இதுவரை 1000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிறுவர் நோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணராகிய டாக்டர் தீபால் பெரேரா வெளியிட்டிருக்கின்றார்.
இவ்வாறு தொற்றுக்கு இலக்காகிய சிறுவர்களில் ஐவர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக நாட்டில் 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு கண்டிப்பாக தொற்று தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.