கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டுலுபேட்டை பீமனபீடு கிராமத்தை சார்ந்தவர் சிவன்னா. இவர் விவசாயியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு சவுபாக்யா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், சவுபாக்யாவிற்கும் – அக்கிராமத்தை சார்ந்த பசவச்செட்டி என்ற 37 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், சிவன்னா வீட்டில் இல்லாத சமயத்தில், தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சிவன்னாவுக்கு பின்னாளில் தெரியவரவே, சிவன்னா தனது மனைவி சவுபாக்யாவை கண்டித்துள்ளார். பசவசெட்டியையும் நேரில் அழைத்து கடுமையாக கண்டித்த நிலையில், கள்ளக்காதல் ஜோடி தங்களின் உல்லாச வாழ்க்கையில் முடிவோடு இருந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிவன்னா விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், சவுபாக்யா தனது கள்ளகாதலனுக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் முத்தம் கொடுத்து உல்லாசமாக இருந்த நிலையில், பசவச்செட்டி சவுபாக்யவிற்கு முத்தம் கொடுத்ததை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை தனது வாட்சப் ஸ்டேட்ஸிலும் வைத்த நிலையில், அவரது அழைப்பு வட்டாரத்தில் உள்ள பலரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இதனை சிவண்ணாவிடம் காண்பிக்கவே, அதிர்ச்சியடைந்த சிவன்னா விரைந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
சிவன்னா வீட்டிற்கு வந்தது கூட தெரியாமல் கள்ளக்காதல் ஜோடி உல்லாச மிதப்பில் மிதந்த நிலையில், உல்லாச போதை தெளிந்து சிவன்னாவை பார்த்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சிவாண்ணா தனது மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலனை அடித்து உதைத்துள்ளார்.
வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பசவசெட்டியை சரமாரியாக வெட்டவே, பலத்த வெட்டுக்காயம் அடைந்த பசவச்செட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பசவபெட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிவன்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.