இலங்கையில் ஒரே நாளில் அதிக கொரோனா பலி!!

இலங்கையில் நேற்று 44 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய முதல் தடவையாக இலங்கையில் ஒரே நாளில் 40 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவை பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கையாகும். அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் 1,132 ஆக உயர்வடைந்துள்ளது.