யாழ்.சாவகச்சேரியில் பயணத்தடையின்போது சட்ட விரோதமாக மதுபான விற்பனை…! 7 பேர் கைது.. வெளியான தகவல்!

பயணத் தடை நேரத்தில் சட்டவிரோதமாக மது பானத்தை வைத்திருந்த மற்றும் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட, தொற்றை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காலத்தில் மதுபானத்தை விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஏழு பேர் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளனர்..

N.சோதிதாதன் உதவி மதுவரி ஆணையாளர். மதுவரி அத்தயட்சகர் T.தங்கராஜா அறிவுறுத்தலில் பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையில் மதுவரி பரிசோதகர் வே.றசிகரன் தலைமையிலான குழுவினர் கொடிகாமம் சாவகச்சேரியில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது
750 மி.லீ 30போத்தல்கள்,
180 மி.லீ 25 போத்தல்கள்,
500 ml பியர் 100 ரின்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது ஏழு சந்தேகநபர்களையும் மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.