ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் மாறி நடிகை கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மகாநதி படத்தின் மூலம் தேசிய விருதினை வாங்கியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வரும் கீர்த்தி பல ஹிட் படங்கள் கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் காதல் திருமணம் என வதந்திகளை சந்தித்து வரும் கீர்த்தி அதை கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் படமுண்டு என்று இருந்து வருகிறார். கெரியரில் கவனம் செலுத்து வரும் கீர்த்தி சமீபத்தில் தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக நடித்து வீடியோ வைரலாகி வந்தது.

இந்நிலையில், கொரானா லாக்டவுனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், வீட்டிலேயே இருந்து வருகிறார். உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், வெறும் முண்டா பனியன், லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக யோகா செய்வது மட்டுமில்லாமல் மந்திரம் சொல்வதுமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.