யாழில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா…..

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் 1232 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 25 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 பேருக்கும், பருத்துறை பிரதேச வைத்தியசாலையில் 7 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் ஒருவருக்கும், மானிப்பாய் வைத்தியசாலையல் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 10 போில் ஆயுள்வேத வைத்தியசாலை ஊழியர்கள் 3 பேர், தனியார் பாமசி ஊழியர்கள் 3 பேர் மற்றும் வீதி அபிவிருத்தி ஊழியர் ஒருவர் உள்ளடங்குகின்றனர்.

மேலும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கு உறுதியாகியுள்ளது இவர்கள் 4 பேரும் காக்கைதீவு மீன் சந்தையில் நடைபெற்ற எழுமாற்று பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.