அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே விஜய்யின் ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், என் ஜீவன், வாத்தி கம்மிங் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் ஆகிய 5 பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், தற்போது ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.