எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்திலும் முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
நேற்று ஜலனி பிரேமதாஸவின் தொற்று உறுதியாகியதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டபோதே, தனக்கும் தொற்று உறுதியானதாக சற்றுமுன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
இலங்கையில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் வரை தான் அதை பெற்றுக்கொள்ள போவதில்லை என கொரோனா தடுப்பூசியை இவர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/sajithpremadasa/posts/10158268484700186