அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் நைட்கிளப் அருகே நடந்த வாக்கு வாதத்தில், கூட்டத்தில் இருந்த இருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனால் இருவர் கொல்லப்பட்டதுடன், 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்றைய 7 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.