பறக்கும் விமானத்தில் இளம்ஜோடிகளுக்கு நடந்த திருமணம்!

இளம்ஜோடிகள் நடுவானிலேயே திருமணம் செய்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மதுரையை கோரிப்பாளையத்தை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகனான ராகேஷிற்கும், தொழிலதிபரின் மகள் தீக்சனாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது,.

இதனிடையே, கொரோனா பரவல் காரணத்தினால் இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டனர்.

அதற்காக, மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை (வாடகைக்கு) முன்பதிவு செய்தனர்.

அதன்படியே, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் 161 பயணிகளுடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

இதில் மகமகன் மற்றும் மணமகளின் உறவினர்களுக்கு மட்டும் பிரத்தோகமாக அனுமதிக்கப்பட்டு, விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், காலை 7.30 மணிக்கு புறப்பட்ட நிலையில் நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். அதன்பின்னர் விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

மேலும், பல வித்தியாசமான திருமணங்களை கண்டாலும் இதுபோன்ற ஒரு புதிய திருமண முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

கொரோனா பரவும் காலத்தில், விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் யாரும் முககவசம் அணியாமல் இருந்தது விவாதத்திற்கு உள்ளாகியது. இப்புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.