சிவப்பு உடையில், ரெட் வெல்வட் கேக் போல ப்ரெஷ்ஷாக இருக்கும் நடிகை ஷெரின்..!

துள்ளுவதோ இளமை திரைப்படம் கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஷெரின். இதன்பின்னர் விசில், ஸ்டூடன்ட் நம்பர் 1, உற்சாகம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதன்பின்னர் திரைத்துறைக்கே வராமல் இருந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இடம் பெற்றார். இதன்பின்னர் மக்களின் மனதில் இடம்பிடிக்க துவங்கினார். ஷெரின் வயதுடைய பல நடிகர்களும், நடிகைகளும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஷெரின் தற்போது திரைத்துறையில் மீண்டும் தனது அங்கீகாரத்தை நிரூபணம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கையில் உடல் பருமனுடன் இருந்த நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தை அடைந்துள்ளார். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து சேலை மற்றும் சுடிதாரில் பல புகைப்படத்தை உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து புகைப்படம் பதிவு செய்து வருகிறார்.

எப்பொழுதும் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஷெரின் தற்போது குடும்ப குத்துவிளக்காக மாறி புடவையை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். குடும்ப குத்து விளக்காக இருந்த நாயகிகள் பலர் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட துவங்கி இருக்கும் நிலையில், ஷெரின் தனது ரூட்டை மாற்றி இருக்கின்றார். சமீபத்தில் இவர் அழகான புகைப்படங்கள் ரசிகர்களை வசியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. இதற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)