பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது! வெளியான தகவல்!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 29-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 3,084 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை அங்கு 9 லட்சத்து 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் நேற்று ஒரே நாளில் 74 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.