தேசிய கால்நடை பண்ணையில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நுவரெலியா- டயகம, தேசிய கால்நடை பண்ணையில் பணி புரியும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அண்மையில் தேசிய கால்நடை பண்ணையில் பணிப்புரிந்த 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணிய 70 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த பி.சி.ஆர்.முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்ற நிலையில் மேலும் 32பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாரு இனம்காணப்பட்டவர்களில் நால்வர், டயகம-சந்திரிகாமம் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும் தொற்றாளர்களாக அடையாயம் காணப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.