நோயாளி ஒருவருக்கு மருந்து எடுத்துச் செல்வதாக தெரிவித்து ஹெரோயினை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிரிய – கெட்டகெடல்ல பொலிஸ் வீதித் தடையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய ஹொரண பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
வீதித் தடையில் வாகனத்தை பொலிஸார் நிறுத்திய போது நோயாளி ஒருவருக்கு மருந்து எடுத்துச் செல்வதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் மோட்டர் வாகனத்தை பொலிஸார் பரிசோதித்த போது அதிலிருந்த 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.