மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் 2.
இதற்கு முன் இவர் நடித்து வந்த சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியல்கள் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று.
மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் ஸ்ரீஐயலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் 2 துவங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் தற்போது மஹாவை ஏமாற்றி தான் மாயன் திருமணம் செய்து கொண்டான் என்பது, மாயனை சிறு வயதில் இருந்து தூக்கி வளர்த்த மாயனின் மாமாவிற்கு தெரிந்துவிட்டது.
தனது மகளை திருமணம் செய்ய தன் முதுகில் மாயன் துரோகம் என்ற பெயரில் குத்திவிட்டான் என்று கூறி மாயனை வெறுத்து ஒதுக்கி, தன் மகள் மஹாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதில் தீடீர் திருப்பமாக மாயனிடம் இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்த, மாயனின் சித்தி, மாயனுடன் மஹாவை சேர்த்து வைக்க, மாயனின் மாமன் வீட்டிற்கு செல்கிறார்.
இந்த திருப்பம், சற்றும் ரசிகர்கள் எதிர்பாராதது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.